மறந்தேன்!
மெய் மறந்தேன்!
"என்ன ஜேகே உங்களிட்ட மனேஜர் அந்த பைலை எடுத்து வரச் சொல்லி எவ்வளவு நேரமாகுது நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க?" தன்னுடன் வேலை செய்யும் கவிதாவின் கேள்வியொலியின் பின்னர் தான் நினைவிற்கு வந்தான் ஜேகே."ஓ சொறி இதோ வாறன்"என்றவாறு பைலுடன் புறப்பட்டான்.சிறிது நேரத்தின் பின்,மனேஜரின் அறையிலிருந்து திரும்பி மீண்டும் அமர்ந்தான்.
மேசையில் எவ்வளவோ பைல்கள் கணனியின் தரிசனத்திற்கு காத்து கிடக்கின்றன.அவற்றை கவனிக்க அவன் தயாரில்லை. எண்ணங்கள் நேற்றைய அந்த அழகியோடு போய்விட்டது.
நினைவுகள் நேற்றைக்குத் திரும்புகின்றன. நேற்று அலுவலகத்திலிருந்து திரும்பி வீடு செல்லும் போதுதான் அவளைக் கண்டான். என்ன அழகு!
சென்று கொண்டிருந்த அவனின் காரும்,பார்வையும் ஒரே நேரத்தில் நின்றன. காரிலிருந்து இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறான்.தொடர்ந்து சென்ற அவன் ஒரு கணத்தில் அவளை நிறுத்தி பேசி விட்டான். முதலில் தயங்கிய அவள் பின்னர்தான் நன்கு பேசத் தொடங்கினாள்.
நிறைய நேரம் கதைத்த பின்னர் தான் அவளுக்கு பெற்றோர் இல்லை.அவள் பெயர் சுருதி என்பதையெல்லாம் அறிந்தான். என்னவொரு குரலில் இனிமை!பண்பு!குறும்பு!அவளின் ஒவ்வொரு சைகையிலும் செய்கையிலும் மெய் மறந்தே போய்விட்டான். பின்னர் பிரிய மனம் இல்லாமல்
வீடு திரும்பினான். அவளுக்கும் அவ்வாறுதான் இருக்க வேண்டும்.
ஜயோ! இன்று மீண்டும் அவளைப் பார்க்கவேண்டும்,பேச வேண்டும் என்று மனசு துடிக்கிறது.
"அலுவலகத்திற்கு அரை நாள் லீவு போட்டு விட்டுச் சென்று விடுவோமா?"என்றும் யோசிக்கிறான். போகத்தான் வேண்டும்!லீவு பெற்று வீட்டு திரும்புகிறான்.வீட்டுக்கு தன் காரில் விரைந்தபடி,கதவைத் திறந்த தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சுருதியைப் பார்க்க விரைகிறான்.
அனாதை இல்லத்தில் தங்கியிருக்கும் எட்டே வயது நிரம்பிய அவளை,எட்டு வருடமாக பிள்ளைப் பாக்கியம் கிடைக்காத தங்களுக்கு இன்றிலிருந்து மகளாக வேண்டும் என்ற எண்ணத்துடன்...!

No comments:
Post a Comment