Wednesday, August 20, 2008

நகைச்சுவை

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

******

ஒரு வாத்தியார் பையன் கிட்ட "மூன்று அழகிகள் நடந்து போகிறார்கள் ஆச்சர்ய வாக்கியமா மாத்து"

பையன் "வாவ்!"

******
ஒரு வயதான ஆள் பாவ மன்னிப்பு கேட்க வந்திருந்தார்
"இரண்டாம் உலகப்போர் சமயத்தில் என் வீட்டில் ஒளிந்து கொள்ள ஒரு அழகி வந்தாள் நான் அடைக்கலம் தந்தேன்"

"அது நல்ல விஷயம் தானே"

"ஆனால் நாளாக நாளாக நாங்கள் தவறு செய்து விட்டோம்"

"அது தவறு என உணர்ந்தாயே உன் குற்றம் மன்னிக்கப்பட்டது"

"நன்றி ஃபாதர், அது தான் என் மனதை இவ்வளவு நாள் உறுத்தியது"

"கடைசியாக ஒன்று கேட்க வேண்டும்"

"கேள் மகனே"

"இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டதை நான் அவளிடம் நிச்சயம் சொல்ல வேண்டுமா?"

நகைச்சுவை

மூன்று பேருக்கு 25 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்

முதல் ஆள்,"எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்" என்றான்.

இரண்டாம் ஆள், "எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்"

மூன்றாவது ஆள்,"எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்"

25 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
முதல் ஆள்," நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்"

இரண்டாம் ஆள்,"நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்"

மூன்றாம் ஆள்,"நாம் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்"என்றான்

எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.

அவன் சொன்னான், "தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா"

காதல் தேசம்

ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்

தீயாய் மூண்டது நம்காதல்
திரிந்தோம் யாழ்ப்பாண வீதியெல்லாம்
திட்டித் தீர்த்தன உன் உறவுகள்
திட்டமின்றி வெளியானோம் வீட்டைவிட்டு

காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
என்னை ஏற்கவில்லை உன் உறவுகள்
ஏனெனில் நான் ஏழை என்பதனால்

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்

நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே...

நகைச்சுவை

அவர் போல் நானும்

ஒரு இளைஞன் அவன் அப்பாவிடம் பைக் வாங்க வேண்டுமென்று சொன்னான்.

அவரோ அர்ரியர்ஸை முடிக்க வேண்டும்,நீட்டாக உடை அணிய வேண்டும்,நீளமான தலை முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார்.

அவனும் அரியர்ஸ் பாஸ் பண்ணி அழகாக உடையணிந்து வந்து மறுபடி கேட்டான்.

"உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் மகனே ஆனால் நீ இன்னமும் உன் தலை முடியை வெட்டவில்லையே"

"ஆனால் அப்பா... நான் அது பற்றி யோசித்தேன் இயேசு கூட நீளமான முடி தானே வைத்திருந்தார்"

அப்பா சொன்னாராம்,"சரி தான் மகனே ஆனால் அவர் எங்கே போனாலும் நடந்தே தான் போவார்"

******

மோசமான நாள்

காரில் போய்க்கொண்டிருந்தவனை அவன் மனைவி செல்போனில் அவசரமாக தொடர்பு கொண்டாள்.

"என்னங்க பாத்து போங்க ஹை வேயில் ஏதோ ஒரு கார் ராங் சைட்ல 300 கிமீ வேகத்தில வருதாம்"

"ஒண்ணா...நூறு காரு போகுது"

******

ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான்.

அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது.

சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான்.

"இதோ இந்த பெட்டில் படுத்து பாருங்கள் தெரியும்" என்று சொல்ல அவனும் ரயிலுக்காக படுத்து காத்திருந்தான்.

அப்போது பார்த்து அவள் கணவன் வந்தான்,"இங்கென்ன செய்கிறாய்?"

"அது...நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?"

கடவுளுக்கே

கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு "என்ன வேண்டும்?" என்றார்.
"நல்லதா ஏதாவது குடுப்பா" என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்.

இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,"இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"

கடவுள் பெருமிதமா,"நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்"னாரு

உடனே பார்டெண்டர்,"சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல"

நட்பு ??


நட்பு ??

நட்பிற்க்கு இலக்கணமாய்
நாம் இருவர் இருந்தாலும்
தப்புக்கணக்குப் போட்டுவிடும்
இவ்வுலகம்

தமிழில் அவள் காதலியாம்
தமிங்கிலத்தில் அவள் Girl friend ஆம்

நண்பி என்றாலும் கூட
ஏன் நம்புவது இல்லை இவ்வுலகம்?

கல்லூரி நினைவுகள்....

கல்லூரி நினைவுகள்....

கல்லூரி நினைவுகள் இன்று
என்னுள்ளே எட்டி பார்க்கின்றன
படிக்கவென வரும் சிலரும் பெண்களை
ரசிக்கவென இன்னும் சிலரும்
பெற்றோரின் இம்சையால் மற்றும் சிலர்

கடைசி வாங்கில் இருந்து அரட்டை அடிக்கும் நண்பரும்
காதல் கடிதம் எழுதும் சில பின்ச்சில் பழுத்தவரும்
பிரின்சியை பற்றி கதை பரப்பும் ஓரிருவர்

சங்கீத மிச்சின் கதையும் சிரிப்பும் அதை நாம் பார்த்து
சிரிக்க அவர் கூறும் வார்தைகளும்
பொம்பிளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
இன்னும் அது யாதென புரியாமல் போச்சு!

மாடியில் நின்று கீழ் வருபவர்களை பார்ப்பதும்
தேவாரம் படிக்கும் போது சிரித்து பிரின்சியிடம்
மொத்த தடியால் அடி வாங்கினதும் அதை பார்த்து
சிரித்த இன்னும் சிலரும்

தலையிடி காய்ச்சல் என்றால் நமக்கு மருந்து தேடி
அலையும் இன்னும் சில நல்ல உள்ளங்களும்
கொண்டு வந்த சாப்பாட்டை பிரித்து எல்லோரும்
சாப்பிடுவதும் போதாவிடில் கன்டினிக்கு ஓடுவதும்

திருக்குறல் மனப்பாடம் செய்துகொண்ட நண்பரும்
பொறுப்பற்று முழிக்கும் என் போன்ற மாணவர்கள்
புத்தகமே கண் என இருக்கும் சிலர் அதை ஆமோதிக்கும்
தமிழ் ஆசிரியை நம்மை ஏதேதோ சொல்லி திட்டும் நாட்கள்
புலித்தோல் போர்த்த பசுக்கலாம் நாம்!

இப்படி எத்தனையோ நினைவலைகள் என்றும்
என்னுள்ளே பசுமையாக வந்து போகும்
அக் காலம் பொற்காலம் தான் - மீண்டும் வராதோ
என ஏங்கும் நம் நண்பர் கூட்டம்