Wednesday, August 20, 2008

நகைச்சுவை

வீட்டிற்கு சாயங்காலம் அவசரமாக வந்த கணவன் மனைவியிடம், "இன்னைக்கு நைட் நண்பனை வீட்டுக்கு சாப்பிட கூப்பிட்டிருக்கேன்" என்றான்.

அவள் அவசரமாக,"என்ன விளையாடுறீங்களா? வீடு குப்பையாட்டம் கெடக்கு, நான் இன்னும் ஷாப்பிங் ஏதும் செய்யல ஸ்பெஷலா ஒண்ணும் வாங்கல அதில்லாம நைட் ஸ்பெஷல் டிஷ் எதும் பண்ற ஐடியா எதுவும் எனக்கு இல்ல, இதெல்லாம் தெரியாம எதுக்கு கூப்டீங்க?"

"இதெல்லாம் தெரியும் அதனால தான் கூப்டேன்"

"தெரிஞ்சும் எதுக்கு கூப்டீங்க?"

"இல்ல... அவன் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்பட்டான் அதான்..."

******

ஒரு வாத்தியார் பையன் கிட்ட "மூன்று அழகிகள் நடந்து போகிறார்கள் ஆச்சர்ய வாக்கியமா மாத்து"

பையன் "வாவ்!"

******
ஒரு வயதான ஆள் பாவ மன்னிப்பு கேட்க வந்திருந்தார்
"இரண்டாம் உலகப்போர் சமயத்தில் என் வீட்டில் ஒளிந்து கொள்ள ஒரு அழகி வந்தாள் நான் அடைக்கலம் தந்தேன்"

"அது நல்ல விஷயம் தானே"

"ஆனால் நாளாக நாளாக நாங்கள் தவறு செய்து விட்டோம்"

"அது தவறு என உணர்ந்தாயே உன் குற்றம் மன்னிக்கப்பட்டது"

"நன்றி ஃபாதர், அது தான் என் மனதை இவ்வளவு நாள் உறுத்தியது"

"கடைசியாக ஒன்று கேட்க வேண்டும்"

"கேள் மகனே"

"இரண்டாம் உலகப்போர் முடிந்து விட்டதை நான் அவளிடம் நிச்சயம் சொல்ல வேண்டுமா?"

நகைச்சுவை

மூன்று பேருக்கு 25 வருட சிறைத்தண்டனை தரப்பட்டது ஆனால் தன்னோடு வைத்துக்கொள்ள ஏதாவது அவர்கள் கேட்கலாம்

முதல் ஆள்,"எனக்கு 500 புத்தகங்கள் வேண்டும்" என்றான்.

இரண்டாம் ஆள், "எனக்கு சிறையில் உடற்பயிற்சி செய்ய உபகரணங்கள் வேண்டும்"

மூன்றாவது ஆள்,"எனக்கு ஒரு லட்சம் சிகரெட்கள் வேண்டும்"

25 வருடம் கழித்து மூன்று பேரும் விடுதலை செய்யப்பட்டனர்
முதல் ஆள்," நான் நிறைய தெரிந்து கொண்டேன் ஒரு லைப்ரரி அமைப்பேன்"

இரண்டாம் ஆள்,"நான் உடலை வலுவாக்கினேன் ஜிம் வைப்பேன்"

மூன்றாம் ஆள்,"நாம் சிகரெட் பிடிப்பதை விட்டு விட்டேன்"என்றான்

எல்லோருக்கும் ஆச்சர்யம் போகும்போது லட்சம் சிகரெட் கேட்டவன் எப்படி திருந்தினான் என்று.

அவன் சொன்னான், "தீப்பெட்டி கேக்க மறந்துட்டேன்ப்பா"

காதல் தேசம்

ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்

தீயாய் மூண்டது நம்காதல்
திரிந்தோம் யாழ்ப்பாண வீதியெல்லாம்
திட்டித் தீர்த்தன உன் உறவுகள்
திட்டமின்றி வெளியானோம் வீட்டைவிட்டு

காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
என்னை ஏற்கவில்லை உன் உறவுகள்
ஏனெனில் நான் ஏழை என்பதனால்

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்

நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே...

நகைச்சுவை

அவர் போல் நானும்

ஒரு இளைஞன் அவன் அப்பாவிடம் பைக் வாங்க வேண்டுமென்று சொன்னான்.

அவரோ அர்ரியர்ஸை முடிக்க வேண்டும்,நீட்டாக உடை அணிய வேண்டும்,நீளமான தலை முடியை வெட்டிக் கொள்ள வேண்டும் என்றார்.

அவனும் அரியர்ஸ் பாஸ் பண்ணி அழகாக உடையணிந்து வந்து மறுபடி கேட்டான்.

"உன்னை நினைத்து பெருமைப் படுகிறேன் மகனே ஆனால் நீ இன்னமும் உன் தலை முடியை வெட்டவில்லையே"

"ஆனால் அப்பா... நான் அது பற்றி யோசித்தேன் இயேசு கூட நீளமான முடி தானே வைத்திருந்தார்"

அப்பா சொன்னாராம்,"சரி தான் மகனே ஆனால் அவர் எங்கே போனாலும் நடந்தே தான் போவார்"

******

மோசமான நாள்

காரில் போய்க்கொண்டிருந்தவனை அவன் மனைவி செல்போனில் அவசரமாக தொடர்பு கொண்டாள்.

"என்னங்க பாத்து போங்க ஹை வேயில் ஏதோ ஒரு கார் ராங் சைட்ல 300 கிமீ வேகத்தில வருதாம்"

"ஒண்ணா...நூறு காரு போகுது"

******

ஒரு ஜோடி ஹோட்டலில் ரூமெடுக்க போயிருந்தார்கள்.ரூமெடுத்து விட்டு மனைவி சோர்வாக இருக்க தூங்க சொல்லி விட்டு கணவன் கீழே இருந்த பாருக்கு போய் விட்டான்.

அவள் படுத்து தூங்க சரியாக ஒரு நிமிடத்தில் அறைக்கு சற்று வெளியே ஒரு ரயில் மிக வேகமாக போனது.

சரி வெளியூரில் சகஜம் என்று திரும்ப தூங்க அதே போல ஒரு ரயில் போனது.உடனே மேனேஜரை பார்த்து இப்படி ரயில் போகிற சப்தத்தால் தூங்க முடியவில்லை என்று சொல்ல அவனும் அறைக்கு வந்து பார்த்தான்.

"இதோ இந்த பெட்டில் படுத்து பாருங்கள் தெரியும்" என்று சொல்ல அவனும் ரயிலுக்காக படுத்து காத்திருந்தான்.

அப்போது பார்த்து அவள் கணவன் வந்தான்,"இங்கென்ன செய்கிறாய்?"

"அது...நான் ரயிலுக்காக காத்திருக்கிறேன் என்று சொன்னால் நம்பவா போகிறீர்கள்?"

கடவுளுக்கே

கடவுள் ஒரு நாள் ஏதோ ஆசையில் ஒரு பாருக்குள் நுழைந்தாராம்.ஏகப்பட்ட வகைகள் இருக்கவும் விற்பனையாளர் இவர் கெட் அப் பார்த்து விட்டு "என்ன வேண்டும்?" என்றார்.
"நல்லதா ஏதாவது குடுப்பா" என்று சொல்ல ஒரு ஃபுல் எடுத்து தந்தார்.
ஐந்து நிமிடத்தில் முடித்து விட்டு அடுத்து என்றார்
இன்னொரு புல் தர அதையும் குடித்து விட்டு அடுத்து என்றார்.

இதே போல பத்து முறை குடிக்க பார்டெண்டருக்கே கை வலித்து விட்டது.கடவுள் கொஞ்சமும் சலிக்காமல் அடுத்து என்றார்.பார்டெண்டருக்கு ஆச்சர்யம்,"இவ்ளோ அடிச்சும் கொஞ்சமும் உளரல,குரல் பிசிறாம அடுத்துங்கிறீங்களே,உங்களுக்கு மப்பு ஏறவே இல்லயா?"

கடவுள் பெருமிதமா,"நாந்தாம்ப்பா கடவுள் எனக்கு எப்படி மப்பு ஏறும்"னாரு

உடனே பார்டெண்டர்,"சரி சரி மப்பு ஓவராவே ஏறிடுச்சு போல"

நட்பு ??


நட்பு ??

நட்பிற்க்கு இலக்கணமாய்
நாம் இருவர் இருந்தாலும்
தப்புக்கணக்குப் போட்டுவிடும்
இவ்வுலகம்

தமிழில் அவள் காதலியாம்
தமிங்கிலத்தில் அவள் Girl friend ஆம்

நண்பி என்றாலும் கூட
ஏன் நம்புவது இல்லை இவ்வுலகம்?

கல்லூரி நினைவுகள்....

கல்லூரி நினைவுகள்....

கல்லூரி நினைவுகள் இன்று
என்னுள்ளே எட்டி பார்க்கின்றன
படிக்கவென வரும் சிலரும் பெண்களை
ரசிக்கவென இன்னும் சிலரும்
பெற்றோரின் இம்சையால் மற்றும் சிலர்

கடைசி வாங்கில் இருந்து அரட்டை அடிக்கும் நண்பரும்
காதல் கடிதம் எழுதும் சில பின்ச்சில் பழுத்தவரும்
பிரின்சியை பற்றி கதை பரப்பும் ஓரிருவர்

சங்கீத மிச்சின் கதையும் சிரிப்பும் அதை நாம் பார்த்து
சிரிக்க அவர் கூறும் வார்தைகளும்
பொம்பிளை சிரிச்சா போச்சு புகையிலை விரிச்சா போச்சு
இன்னும் அது யாதென புரியாமல் போச்சு!

மாடியில் நின்று கீழ் வருபவர்களை பார்ப்பதும்
தேவாரம் படிக்கும் போது சிரித்து பிரின்சியிடம்
மொத்த தடியால் அடி வாங்கினதும் அதை பார்த்து
சிரித்த இன்னும் சிலரும்

தலையிடி காய்ச்சல் என்றால் நமக்கு மருந்து தேடி
அலையும் இன்னும் சில நல்ல உள்ளங்களும்
கொண்டு வந்த சாப்பாட்டை பிரித்து எல்லோரும்
சாப்பிடுவதும் போதாவிடில் கன்டினிக்கு ஓடுவதும்

திருக்குறல் மனப்பாடம் செய்துகொண்ட நண்பரும்
பொறுப்பற்று முழிக்கும் என் போன்ற மாணவர்கள்
புத்தகமே கண் என இருக்கும் சிலர் அதை ஆமோதிக்கும்
தமிழ் ஆசிரியை நம்மை ஏதேதோ சொல்லி திட்டும் நாட்கள்
புலித்தோல் போர்த்த பசுக்கலாம் நாம்!

இப்படி எத்தனையோ நினைவலைகள் என்றும்
என்னுள்ளே பசுமையாக வந்து போகும்
அக் காலம் பொற்காலம் தான் - மீண்டும் வராதோ
என ஏங்கும் நம் நண்பர் கூட்டம்

ஒரு கடிதம்

சகோதர இன நண்பனே!
வெற்றுத் தோட்டாக்களை எண்ணி
கணக்குப் படித்தவர் நாம்.
விழும் வெளிச்சக் குண்டுகளில்
மக்னீசியம் எடுத்து
விஞ்ஞானம் படித்தவர் நாம்!
எறிகணைகளின் கோதுகளில்
பூங்கண்றுகள் வளர்த்தவர் நாம்!
புழுதியைக் குடித்து
புயலோடும் வாழக்
கற்றுக் கொண்டவர் நாம்!
ஏசிக்குள் நீங்கள்
இருந்த போதெல்லாம்
தூசிக்குள் துவெண்டெழுந்தவர் நாம்!
நீங்கள்
வேதங்களைப் படித்து
மேதைகளாக நினைத்த போதெல்லாம்
நாங்கள்
வேங்கைகளை படித்து
வரலாற்றை யாசித்தவர்கள்!
நீங்கள்
மூச்சுக் காற்றிற்கே
முகவரி தேடிய போதெல்லாம்
மூச்சுத்தான் எங்கள்
முகவரியென்று கத்தியவர் நாம்!
காய்களுக்காய்
மரங்களை தறிப்பவர்கள் நீங்கள்
காய்களுக்காய்
மரங்களை வளர்ப்பவர்கள் நாங்கள்!
எங்கள் புன்னகையை
நீங்கள் ரசிக்கத் தயாராயில்லை
ஏனெனில்
உங்களுக்கு அரசியல் தெரியும்!
எங்கள் கண்ணீர்
உங்களுக்கு தெரிவதில்லை
ஏனெனில்
விழித்திரை நீங்கி
இனவெறித் திரையல்லவா
உங்கள் கண்களில்!
நீங்கள்
காமத்திற்காய்
காதலை சிதைப்பவர்கள்
உங்களுக்கு
எப்படித் தெரியும்
அன்பின் அர்த்தம்!
அதனால்தான் சொல்கிறோம்
எம்மை நாமே
ஆழ்வோம் என்று
அங்கு வந்து பாருங்கள்
அன்பின் ஆழத்தை!

Friday, May 16, 2008

அழைத்து வா

அழைத்து வா


குப்பை கிளறி
துர்நாற்றம் பொறுத்து
அருவருப்பு தாங்கி
வெளி இழு அவனை

மக்கிக்கொண்டிருந்த பொழுது
உயிர் வாழ்ந்தவன்
வெளிகாற்றில் மூச்சு திணறக் கூடும்
பதறிவிடாதே.....

அழைத்து வா உன் பழைய காதலனை
காதல் விதைத்து
உயிர் அறுத்து போனவனை

விட்டு போவாnன்று
உணரவே இல்லையா நீ....?
கடற்கரை இருட்டின் சத்தியங்கள்
வெறும் சதை உரசலிலும்
மூச்சின் வெப்பதிலும் வந்தவையா.....?

அழைத்து வா உன் பழைய காதலனை
அரை மணி நேர அழுகையில்
அநியாயங்களை நியாயங்களாய்
அமைத்துப் பிரிந்தவனை...

கோபமே வரவில்லையா உனக்கு?
எத்தனை இரவுகள் விழித்திருப்பாய்??
எத்தனை கனவுகள் உதிர துடித்திருப்பாய்?
எத்தனை தலையணைகள் கண்ணீரில் நனைத்திருப்பாய்??
கனவில் பிறந்து கற்பனையில் தத்தெடுத்த
நான்கைந்து குழந்தைகளை எங்கு புதைத்தாய்??

அழைத்து வா உன் பழைய காதலனை
தொங்க தொங்கத் தாலி கட்டி
காதலின் சுவடறுத்து நின்றவனை

சொல்லித் தான் ஆக வெண்டும்

அழைத்து வா உன் பழைய காதலனை



தோல்வியுற்ற காதலிக்கெல்லாம்

நல்ல கணவன் வாய்க்கிறான்...


விட்டுச்சென்றவன் எல்லாம்
நல்ல கணவன் ஆகிறான்..

அழைத்து வா உன் பழைய காதலனை

அவன் மனைவி
யாரையும் தேடி போகும் முன்...
என்னை தேடி
எந்த மனைவியும் வரும் முன்

8ம் வகுப்பு மாணவியின் ஈழக்கவிதை

நித்தம் பல சத்தம் காணும்
இடமெல்லாம் இரத்தம்!
அதன் காரணம் தான் யுத்தம்
தினம் பல உயிர்கள் பலி-தமிழ்
மனமெங்கும் அழுகை ஒலி-ஈழத்
தமிழனுக்கு என்று தான் விடிவொளி?...
சிங்கள படைகள் செய்தனர் நாசம்!
வெளியில் போட்டனர் பல வேசம்!
ஈழத்தமிழன் மேல் யாருக்கு பாசம்!
உயிர்களை இழந்து
சொந்தங்களை துறந்து
தாய் மண்ணை மறந்து
ஆதரவாய் இங்கே வந்தால்...
அகதியென முத்திரையிட்டு
முகாம்களில் அடைக்கும் உங்களிடம்
அன்பாய் கேட்டுக்கொள்கிறோம்...
இங்கே குடியுரிமை-இல்லையெனில்
அங்கே சமாதானம்!..

- வெ.கார்த்திகா,
8 ஆம் வகுப்பு,
தூய இஞ்ஞாசியார் மேல்நிலைப்பள்ளி,
பாளையங்கோட்டை.

Friday, March 28, 2008

இறுதிப் போர் இதுவன்றோ?

இறுதிப்போர் இதுவன்றோ?


மறத்தமிழர் நாமென்று மார்தட்டி வாழ்ந்திருக்கும்
மன்னும் உயர்குலமே! மரபுபேண் என்னினமே!
உறவின ரெனத்தழுவி அணைத்து மகிழ்ந்;திட
அன்னை நிலமடந்தை ஆவலுடன் அழைக்கி;ன்றாள்!
புறம்பாட வைத்தவுயர் வரிப்புலி விறலோர்தாம்
பொறுமை காக்கின்றார்! போர்முழக்கம் கேட்கிறது
இறுதிப்போர் இதுவன்றோ? இன்னும் ஆகவில்லை.
இரண்டொரு நாட்களில் எல்லாம் முடிந்துவிடும்!

விடுதலை வீரர்தம் வெற்றிகள் தாமங்கு
விண்ணதிர முழங்கி வீறுடன் நிற்கிறதே
கடும்போர் புரிந்தங்கு மாற்றான் கலங்கிடக்
களத்தினில் வேங்கைகள் அணியென நிற்கின்றார்
மடுநகர் வீழ்த்திடப் பெரும்படை விடுத்தோர்
மடிந்தனர் ஒழிந்தனர் மாதுயரில் வீழ்ந்தனர்
சுடுகாடாய் ஆக்கியே இராணுவத்தைப்; புதைக்கின்றார்
சுற்றம் அறிந்திடாது செய்திகளை மறைக்கின்றார்!

தள்ளாடி முகாமங்கு சாய்ந்து நிற்கிறதே!
தலைதெறிக்க எறிகணையிற் தாழ்வுண்டு போயினரே!
அள்ளிவந்து குவித்திட்ட அன்னியரின் ஆயுதங்கள்
அத்தனையும் அழிந்தனவே அலறுகிறார்! கதறுகிறார்!
விள்ளற்கரிய இழப்புக் கள்தமைப் பெற்றோர்
வகையேது மறியாது வன்முறையை ஆங்கே
பள்ளிச் சிறார்மீது பரவலாய்த் திணிக்கின்றார்
பாவையர் மேனியிலும் குண்டுமழை பொழிகின்றார்!

முகமாலை மணலாறு நாகர் கோவிலென
மும்முனைத் தாக்குதலில் வன்னியை வீழ்த்தியே
அகமெங்கும் தமழீழ அன்னையே நிறைவாய்
அன்னவள் சிறைமீட்கப் புறப்பட்ட தீரரைப்
பகைவர்தாம் அழிப்போமெனப் பகர்கின்றார் பலவாறு
பட்டதுவோ படுதோல்வி பன்னாடும் அறிந்ததே!
நகைப்பிற் கிடமன்றோ? நாணியே நிற்கின்றார்!
நாட்டு மக்களே நீதிதனைக் கற்பிப்பார்!

பிடிப்போ மெனக்கூறவும் பின்னின்று வீழ்த்தவும்
பிரபாகரன் என்ன படவுலகின் நாயகனா?
பொடிப்பொடியாய்ப் பகையுடைத்துப் புதியவர லாறுதனைப்
படைத்திடப் பிறந்த புறத்திணைத் தலைவனன்றோ?
மடிதவழும் பிள்ளயைவன் மன்னும் தமிழன்னை
மாதவம் செய்தன்று மலர்வுடன் பெற்றுமே
குடிமக்கள் தமைக்காக்கக் கோபுரமாய் வளர்த்தெடுத்த
கொள்கை மாறிலாக்; குலமகன் இவனன்றோ?

தன்மானத் தமிழனெனத் தரணியிலே துலங்கும்
தீரனாம் ஒருவனின் மூச்சிங் குள்ளவரை
பொன்மனம் மிக்கவிப் புரவலனை யாரும்;
பகையென நெருங்கிப் பற்றிட விடமாட்டான்
இன்னுயிர் கொடுத்தேனும் இணையனாய் இருந்திடுவான்
இறுதிஅசை வுள்ளவரை தலைவனுயிர் காத்திடுவான்
அன்னவன் எம்தம்பி ஆதவனின் மறுஉருவம்
அருவம் உருவமென இலங்குவோன் அவனன்றோ?

வீட்டிற்கொரு பிள்ளையென நாடுகாக்கப் புறப்பட்ட
வீரம்கொள் வரலாறு விதைந்துரைத்து மகிழும்நாம்
கூட்டிச் செல்கின்றார் குழந்தைகளைக் களத்திற்கெனக்
குய்யோ முறையோவெனக் குற்றம் சுமத்துகிறோம்
ஈட்டினர் வெற்றிகள் எம்குலத்தோர் இவ்வழியே
எண்ணிப் பார்த்திடத் தயங்குகிறோம்; ஏன்தானோ?
நாட்டிற்காய் உழைத்தோர்தம் வரலாறு கள்தம்மை
நலமே யறிந்திடின் தெளிவாகும் சிந்தனைகள்!

போராடி வென்றுநாம் புள்ளிகள் பெறவேண்டும்!
புன்மையாள ரைத்துரத்தி விரட்டிட வேண்டும்!
காரார் குழல்மங்கை கன்னித் தமிழன்னை
கைவிலங்கு முற்றாய்த் தெறித்திடல் வேண்டும்!
சீராய் வாழ்ந்திடும் செந்தமிழின மேயுன்கை
சிவந்திட நீயவர்க்கு வழங்கிட வேண்டும்!
சார்வார் எம்பக்கம் அனைத்துலக நாட்டினரும்
தமிழீழத் தாயவளை இணைத்திடுவார் தம்மோடு!



Wednesday, March 5, 2008

மறந்தேன்! மெய் மறந்தேன்!

மறந்தேன்!
மெய் மறந்தேன்!

"என்ன ஜேகே உங்களிட்ட மனேஜர் அந்த பைலை எடுத்து வரச் சொல்லி எவ்வளவு நேரமாகுது நீங்க என்ன பண்ணிகிட்டு இருக்கிங்க?" தன்னுடன் வேலை செய்யும் கவிதாவின் கேள்வியொலியின் பின்னர் தான் நினைவிற்கு வந்தான் ஜேகே."ஓ சொறி இதோ வாறன்"என்றவாறு பைலுடன் புறப்பட்டான்.சிறிது நேரத்தின் பின்,மனேஜரின் அறையிலிருந்து திரும்பி மீண்டும் அமர்ந்தான்.

மேசையில் எவ்வளவோ பைல்கள் கணனியின் தரிசனத்திற்கு காத்து கிடக்கின்றன.அவற்றை கவனிக்க அவன் தயாரில்லை. எண்ணங்கள் நேற்றைய அந்த அழகியோடு போய்விட்டது.

நினைவுகள் நேற்றைக்குத் திரும்புகின்றன. நேற்று அலுவலகத்திலிருந்து திரும்பி வீடு செல்லும் போதுதான் அவளைக் கண்டான். என்ன அழகு!

சென்று கொண்டிருந்த அவனின் காரும்,பார்வையும் ஒரே நேரத்தில் நின்றன. காரிலிருந்து இறங்கி அவள் பின்னாலேயே செல்கிறான்.தொடர்ந்து சென்ற அவன் ஒரு கணத்தில் அவளை நிறுத்தி பேசி விட்டான். முதலில் தயங்கிய அவள் பின்னர்தான் நன்கு பேசத் தொடங்கினாள்.

நிறைய நேரம் கதைத்த பின்னர் தான் அவளுக்கு பெற்றோர் இல்லை.அவள் பெயர் சுருதி என்பதையெல்லாம் அறிந்தான். என்னவொரு குரலில் இனிமை!பண்பு!குறும்பு!அவளின் ஒவ்வொரு சைகையிலும் செய்கையிலும் மெய் மறந்தே போய்விட்டான். பின்னர் பிரிய மனம் இல்லாமல்
வீடு திரும்பினான். அவளுக்கும் அவ்வாறுதான் இருக்க வேண்டும்.

ஜயோ! இன்று மீண்டும் அவளைப் பார்க்கவேண்டும்,பேச வேண்டும் என்று மனசு துடிக்கிறது.
"அலுவலகத்திற்கு அரை நாள் லீவு போட்டு விட்டுச் சென்று விடுவோமா?"என்றும் யோசிக்கிறான். போகத்தான் வேண்டும்!லீவு பெற்று வீட்டு திரும்புகிறான்.வீட்டுக்கு தன் காரில் விரைந்தபடி,கதவைத் திறந்த தன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சுருதியைப் பார்க்க விரைகிறான்.
அனாதை இல்லத்தில் தங்கியிருக்கும் எட்டே வயது நிரம்பிய அவளை,எட்டு வருடமாக பிள்ளைப் பாக்கியம் கிடைக்காத தங்களுக்கு இன்றிலிருந்து மகளாக வேண்டும் என்ற எண்ணத்துடன்...!

Wednesday, February 27, 2008

கண்ணியமான காதல்



இனிக்க இனிக்க
தினமும் பேசும்
கண்ணியமான நாம்
இனிய காதல்ஜோடி

இருவரும் இருவருடம்
ஒருவரை ஒருவர் நேரில்
காணாமல் காதலித்த
காலங்கள் இனிமையானவை

இன்று நேரில் சந்திக்கையில்
கன்றை இழந்த தாய்ப்பசு
மறுபடி அதை சந்திக்கையில்
கொள்ளும் சந்தோசத்தை
நான் அடைந்த போதிலும்
தொடமுடியாமல் தடுத்தன
கண்ணியமான நம் காதல்

கையில் மலர்ச்செண்டோடும்
நெஞ்சில் காதலோடும்
என் முன்னே தோன்றிய உனை
கண்டதும் என் கண்கள்
காதலால் கண்ணீர் வடித்தன

வடிந்த கண்ணீரை
துடைத்திட எழுந்த கைகள்
ஏனோ பின் தயங்கின
கண்ணியமான காதலால்

மறுநிமிடம்.....

பூந்தோட்டத்தில் இருந்த நம்மை
மாந்தோப்பில் குலவிய இருகிளிகள்
எம் உதட்டையும் குவிய வைத்து
கண்ணியமான காதலை தோற்கடித்தது

Friday, February 22, 2008

நட்பு

நட்பு
ஜேகேயும் அனிதாவும் உயிர் நபர்கள். இருவருக்கும் நான்கு வயது வித்தியாசம் இருந்தபோதும் அன்புகாட்டிக் கொள்வதில் வித்தியாசம் இருந்ததில்லை.

அனிதா கல்வி கற்றுக் கொண்டிருந்தாள்; ஜேகே தனியார் கம்பனி ஒன்றில் நல்ல வேலையில் இருந்தான். அதனால் அனிதாவின் கல்வித் தேவைகள் அனைத்தையும் ஜேகே பூர்த்தி செய்து வந்தான்.
அனிதா ஏழ்மையான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் நட்பில் கோடிஸ்வரியாக இருந்தாள்.

இவர்களின் அன்னியோன்யத்தை பார்த்து பொறாமைப்பட்ட ஜேகேயின் நன்பர்கள்'உன் நட்பை உறுதி செய்ய நீ அவளிடம் ஜ லவ் யூ சொல்ல வேண்டும். அதனை அவள் ஏற்றுக் கொண்டால் உன் நட்பு பொய் என்றும் ஏற்காவிட்டால் உன் நட்பு உண்மை என்றும் ஏற்றுக் கொள்வதாய் சவால் விட்டார்கள். சவாலை சமாளிப்பதில் ஆர்வம் கொண்ட ஜேகே அனிதாவிடம் ஜ லவ் யூ சொல்ல தயாரானான்.

அன்றும் வழமைபோல பாடசாலை விட்டு வந்து கொண்டிருந்த அனிதாவை அழைத்து பேச ஆரம்பித்தான்."அனி.... என்மனசில உள்ளத நா சொல்லலாம்னு நினைக்கிறேன்.ஜ லவ் யூ அனி. நீ எனக்கு வேணும்டா....... "சொல்லி முடிப்பதற்குள் அனிதா அவன் கைகளை உதறிவிட்டு" ஜே நீ இவ்வளவு கேவலமானவனா இருப்பன்னு நா நினைக்கவே இல்ல.என் நட்ப நீ தப்பா புரிந்துகிட்டு இவ்வளவு நாள் என்னை ஏமாற்றியிருக்கா.இனி நா ஏமாறமாட்டேன் குட்பாய் ஜேகே என துப்பாக்கியில் இருந்து வெளிவரும் தோட்டாக்களால் வார்த்தைகளை இதயத்தில் இரைத்து விட்டு ஓடி மறைந்தாள்.
தன் நட்பு உண்மையானது என நிருபித்த போதும் நண்பியை பிரிந்து வாடினான். அதன் பின் நடந்த சம்பவத்தை விளக்க பல தடவைகள் ஜேகே முயன்ற பொழுதும் அனிதா ஜேகேயை சந்திப்பதை தவிர்த்தாள். தன்னையும் தன் மனதையும் என்றாவது புரிந்துகொள்வாள் என்ற எதிர்பார்ப்பில் இன்னும் ஜேகே அனிதாவிற்காக காத்திருக்கிறான்....

Sunday, February 17, 2008

தங்கத் தமிழ் மகள் சங்கத்தின் கவி இழை

மின்மினிகள்
வண்ணங்களின் வளைவு நெளிவுகளில்
எண்ணங்களின் தெளிவை பிரதிபலிக்கும்
சாலையோர விளம்பர பலகை ஓவியன்..
உயரமான இடத்தில் போய் வரைந்தாலும்
உயர்வுகாண முடியா வாழ்க்கையில்
வாழ்த்துகள் சிலர் வாயால் கேட்க
சின்ன சின்ன சந்தோசம்..

உழைப்பையே பெரிதும் நம்பி
உழவையே தொழிலாய் கொண்டு
கலப்பையை கையில் ஏந்தி
காலத்துக்கும் வெயில் மழை பாரா
அனைவரின் பசிபோக்க அவனின்
பசி மறந்து உழைக்கும் விவசாயி
உழைப்பின் பலனாய் மகசூல்
காணும் போது தான் மனதோரம்
சின்ன சின்ன சந்தோசம்...

கெட்டி மேளம் கொட்டாத காலம்
கட்டிக்கொள்ள இதுவரை யாருமில்லை
வெட்டியாய் வாழ்ந்தே முடிப்பேனோ
என்று எண்ணியே நாளுமே
நரகமாய் தள்ளும் முதிர்கன்னி
திடீர் ஒருநாள் பெண்பார்க்க ஏற்பாடு
கனவுகளின் கருவுறுதல்
நினைவுகளில் சின்ன சின்ன சந்தோசம்...

எண்ணெய் தேய்க்கா தலை
அழுக்கு சீருடை அடிவாங்கியே
வேலை கற்கும் அழியாத கனவுகளோடு
வேலை முடித்து சோகமாய் திரும்பும்
மெக்கானிக் சிறுவன் அடைமழைக்காய்
ஒதுங்கிய பள்ளி நினைவுகள் அழகாய்
சின்ன சின்ன சந்தோசம்...

ஆம்
சின்ன சின்ன சந்தோசங்கள் எல்லாம்
இருட்டு தேசத்தின் மின்மினி பூச்சிகள்
இன்றளவும் முன்னேறா வாழ்க்கை
முகம் தெரியா மின்மினிபூச்சிகளாய்
எம் சகோதர சகோதரிகள்..


ஜெ.தணிகைவாக்கில் இனிமை வேண்டும்

Wednesday, February 13, 2008

கழிப்பறையில் அவளுடன் சில நிமிடங்கள்

[அன்றாடம் நடக்கும் ஒரு கற்பணைக் கதை தான், ஆனால் பல இடங்களில் இதுபோல் நடப்பது உண்மை. வெட்கித் தலை குனிய வேண்டிய விசயம். ]டர்ர்ர்ர்ர்ர்ர் டம் டம் டம் டர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர் "ஏம்மா ஓரமா போக கூடாதா" ஆட்டோக்காரன்"என்னங்க அவன், நாம ஓரமா தான் நடந்து போறோம்,, நம்மையே ஓரமா போக சொல்லுறானே.. கபோதி " மோகினி வெடித்தாள்"இந்த ஆட்டோகாரங்க தொல்லை தாங்க முடியல, ராஸ்கல்ஸ், நீ கோவிச்சிக்காத டியர். " தணிக் "ஏங்க இந்த சண்டே வெயில்ல டி.நகர் வரவேண்டாம்னு சொன்னேன் கேட்டீங்களா ? ஒரே புகை, பெண்களை மட்டும் குறி வைத்து இடிக்கும் மனித உருவில் தடி மாடுங்க" பொறிந்தாள் மோகினி"சரி சரி ம்மா இந்த ஒரு முறை தானே, என் தங்கச்சி ஏதோ கேட்டுது அதை வாங்கி அனுப்ப தான் இப்ப வந்தோம், இனி எவன் வருவான் இங்க " மனைவிக்கு சப்போர்ட்டாக தணிக்"சரி சரி என்னத்த பண்றது , அடுத்து என்ன வாங்கனும் லிஸ்டல பாருங்க " மோகினி"டாப்ஸ், பேன்ட்ஸ் ..! " தணிக்"செல்லிக்கு போய்டலாமா..? " மோகினி"எனக்கு என்னம்மா தெரியும் எங்கே வேண்டுமானாலும் ஓகே தான்..!" தணிக்"என்னங்க வயித்தை கலக்குறா மாதிரி இருக்கு.. நாம் அப்பவே சொன்னேன் சரவண பவன்ல தயிர்சாதம் சாப்பிட மாட்டேன்னு கேட்டீங்களா..? " கோபத்துடன் மோகினி"சென்னையில சரவண பவன் தான் இருப்பதிலேயே டாப், வேற யாரிடமாவது சொல்லாத சிரிப்பாங்க.. ஹ ஹ ஹ " கிண்டலுடன் தணிக்"என்னங்க சரவணபவன் , நிம்மதியா உட்காந்து சாப்பிட முடியுதா..?சாப்பிட்டு முடிக்கும் முன்னாலேயே எப்படா காலி பண்ணுவோம்னு 4 பேர் நம்ம முன்னால வந்து நிக்குறாங்க ..அது கூட பரவாயில்லை.. அந்த ஆளு, அந்தாங்க அண்ணாச்சி மூனாவதா அந்த சின்ன பொண்ணை இழுத்துக்குனு ஓடினார்னு கேட்டதுக்குப் பிறகு நான் அங்க என்ன சாப்பிட்டாலும் வயத்தை கலக்குவது போலவேஇருக்குங்க.." நீண்ட லக்சர் வாசித்தாள் மோகினி."ஏம்மா அவர் இழுத்துகுனு ஓடினா நாம என்ன செய்ய முடியும்..? இந்த ஒரு இடம்தான் சாப்பிடும் படியா இருக்கு.." சமாளித்தான் தணிக்"என்னமோ போங்க, என்னை எதிர்த்து பேசுவதே உங்களுக்கு வழக்கமா போச்சு , லவ் பண்ணும் போது மட்டும் 1008 முறை உன்னை எதிர்த்தே பேச மாட்டேன்னு டயலாக் எல்லாம் சொன்னீங்க.. இப்ப அதெல்லாம் மறந்து போச்சா " பொங்கினாள் மோகினி"சரி சரி விடும்மா,, ஏன் பழைய கதை எல்லாம் இப்ப..? " வியர்வையை துடைத்துக் கொண்டே தணிக்"அத்தனை பேரு சாப்பிட வரோமே ஒரு நல்ல டாய்லட் வச்சிருக்கானா இந்த சரவண பவன்ல..இடியட்ஸ்..என்ன மயிருக்கு இது கேபிடல் சிட்டி.. ஒரு நல்ல டாய்லட் வசதி கூட இல்லாம ஷாப்பிங்க் காம்ளக்ஸ்...எவனப்பாரு லஞ்சம் வாங்கிகினு நோ அப்ஜக்சன் கொடுத்துடுறாங்க.. நம்மை மாதிரி மக்கள் தான் அவஸ்தைப் படுவது.. என்கிட்ட மட்டும் கன் இருந்தா இந்த கவர்ன்மட்ல வேலை செய்ற எல்லா ராஸ்கல்ஸையும் சுட்டுட்டு ஜெயிலுக்கு போயிடுவேன் " ஞாயமாகப் பேசினாள் மோகினி"சரிம்மா சரிம்மா சத்தாமா பேசாத நாம ஏதோ சண்டைப் போடுறோன்னு நினைச்சிக்கப் போறாங்க.." வியர்வை பொங்கியதை துடைத்துக் கொண்டே தணிக்"செல்லியில டாய்லட் சுமாரா இருக்குமாம் சீக்கிரம் வாங்க.." கோபத்துடன் சொன்னாள் மோகினி.செல்லியை அடைந்ததும், செக்யூரிட்டி பெண்ணிடம் டாய்லட்டை கேட்டு ஓடினாள் மோகினிபெண்கள் கழிப்பறையில் ஒரு நீண்ட வரிசையைக் கண்டதும் எரிமலையானாள் மோகினி..வரிசையில் நின்றுக் கொண்டிருந்த ஒரு பெண்ணிடம்.."ஏங்க என்ன ஆச்சு டாய்லட் ஏதாவது பிரச்சனையா..? ஏன் இத்தனை பேரு நிக்கிறாங்க க்யூவில " மோகினி சீரியஸாக."தெரியலைங்க ஏதோ பிளஷ் ஆக மாட்டேங்குதாம், உள்ளே ரிப்பேர் நடக்குது " அந்தப் பெண்"1000 கணக்கா பெண்கள் வந்து போகும் ஒரு இடத்தில இந்த மாதிரி டாய்லட் ரிப்பேர் ப்ளடி பாஸ்..." மோகினிவரிசையில் நின்றுக்கொண்டிருந்த சில பெண்கள் புலம்பிய படியே வெளியே சென்றார்கள்.."ஏம்மா என்னா ஆச்சு , ஏன் போறீங்க " மோகினி"என்னத்த பண்ண சொல்லுறீங்க.. இந்த நாட்ல பொம்பளையா பொறந்தது நம்ம தலை எழுத்து.. மூ... கூட அடக்கவேண்டியிருக்கு..எவன் தான் இதை எல்லாம் கேட்பானோ..?" அந்தப் பெண்மணி.சில நிமிடங்கள் கழிந்தன..பொறுமை இழந்த மோகினி, அங்கே அருகே நின்றுக்கொண்டிருந்த செக்யூரிட்டி பெண்ணிடம்"ஏம்மா இங்க முதலாளி யார்மா? வரசொல்லுமா இங்கே.. இத்தனைப் பெண்கள் இங்கே இவ்வளவு நேரமா நிக்கிறோம்.. ஒரு டாய்லட் சரியா இல்லாம என்ன மயிருக்கு கடையை திறந்து வச்சிருக்கீங்க..? கூப்பிடும்மா யாரு கடை முத்லாளி..?"வரிசையில் நின்ற பெண்கள் தங்களுக்காக பேச ஒரு தலைவர் இருப்பதை அறிந்தது சத்தாமாக பேச ஆரம்பித்தார்கள்..விசயம் தீவிரமாவதை உணர்ந்த செக்யூரிட்டி பெண்.. உள்ளே ஓடினாள்.."இவனுங்களுக்கு இதே பொழப்பு தான்.. டாய்லட் நல்லா இல்லைனா ஏன் கடையை திறக்கனும்.. பெண்களுக்கு எத்தனை அவஸ்தைகள் இருக்கு..எவனுக்காவது தெரியுதா..? " எல்லா பெண்களும்."ஏம்மா நீங்க எவ்ளோ நேரமா நிக்குறீங்க...?" முதலில் நின்ற பெண்மணியிடம் கேட்டாள் மோகினி"கால் மணி நேரமா.." அந்தப் பெண்மணி.."கால் மணி நேரமாவா..? இன்னுமா சரி செய்யல..? " மோகினி"ஆமாம்மா இப்ப முடிஞ்சிடும்னு சொன்னாங்க அதான் நிக்கிறோம் " அவர்கள்வெள்ளை நிற சட்டை..வேட்டி கட்டியிருந்த ஒருவர் ஓடி வந்து.. என்ன என்ன என்று கேட்டார்."ஏங்க இத்தனைப் பேரு கால்மணி நேரமா நிக்கிறோமே.. டாய்லட் என்ன ஆச்சு ?" மோகினி"ப்ள்ஷ் சரியா வேலை செய்யல,, தண்ணி வரலையாம்.. அது தான் பாக்குறாங்கல்ல.. என்ன இப்ப ?ஏன் கத்துறீங்க.." அவர்."யோவ் இன்னாயா கத்துறாங்க..? பொம்பளைங்களுக்கு எவ்வளவோ அவஸ்தை இருக்கும் உன்கிட்ட எல்லாத்தையும் சொல்லனுமா ? " பெண்கள் மொத்தமா.."ஏம்மா ஏன் கத்துறீங்க அதான் சரி செய்றாங்கல்ல.." அவர்" இங்க பாருங்க.. நாங்க உடனே இப்ப டாய்லட்டை யூஸ் செய்து ஆகனும்... எப்படியாவது தண்ணிக்கு ஏற்பாடு பண்ணுங்க.. இல்லைனா டாய்லட் ரெடியாகும் வரை கடையை இழுத்து மூடுங்க.." மோகினி வீரமாக பேசினாள்."ஏம்மா கடையை மூட சொல்ல நீ யாரு..? டாய்லட் ரெடியாக இன்னும் 10 நிமிசம் ஆகும்..அவசர வற்ர வங்க பாண்டிபசார்ல இருக்குர கவர்மெண்ட் டாய்லட்டுக்கு போங்க.." அவர்"என்ன திமிரா பேசரான் பாத்தியா ராஸ்கல்.." பெண்களில் ஒருவர்.கைப்பையினுள் இருந்த மொபைல் போனை எடுத்து பேசினாள்.."ஏங்க எங்க இருக்கீங்க.." மோகினி"இங்கதாம்ம ரிசப்ஷன்ல உட்கார்ந்துக்கொண்டி இருக்கேன்.. ஏன் லேட்டு சீக்கிரம் வா.." திணக்."நீங்க முதல்ல 2 வது ப்ளோருக்கு வாங்க..உடனே " மோகினி போனை துண்டித்தாள்..திணக் வேகமாக 2வது ப்ளோரை தேடி ஓடினான்."ஏம்மா என்னா ஆச்சு.. ஏன் இவ்ளோ பெரிய கூட்டம்.. நீ போகல இன்னும்.. அவசரம்னு சொன்னியே.." திணக் அவசர அவசரமாக கேட்டான்."இங்க லேடிசூக்கு தண்ணி ஏற்பாடு செய்ய மாட்டாராம்...அந்த கேமராவை எடுங்க.." கோபமாக மோகினி.பையினுள் இருந்த டிஜிட்டல் கேமராவை எடுத்து அங்கே நடப்பதை ஷீட் செய்ய ஆரம்பித்தாள்"ஏம்மா என்ன செய்றீங்க.. எங்க கேமரா எல்லாம் யூஸ் செய்ய கூடாது.."அவர் அவச்ரமாக.."யோவ் சீக்கிரம் தண்ணிய ஏற்பாடு பண்ணுங்க.. உங்களுக்கு கோர்ட் கேஸூன்னு அலையனுமா..? அந்தம்மா யார் தெரியுமா.. ஹிண்டு ரிப்போர்டர்யா.. உங்க கடை லட்சனம் இந்தியா முழுவதும் நாறிடும்.." அந்த இடத்தில சரியாக பேசினான் தணிக்.."சாரிம்மா.. சாரிம்மா.. நாம் இப்பவே.. தண்ணி ஏற்பாடு செய்றேன்.. அந்த கேமராவை முதல்ல ஆஃப் செய்யுங்க.." கெஞ்சினார் அவர்."யோவ் ரிப்பேர் செய்தது போதும் வாங்கையா வெளியே.." அவர்அங்கே நின்றுக்கொண்டிருந்த செக்யூரிட்டிப் பெண்களை பாத்து.."ஏம்மா சீக்கிரம்.. 10 பேரை கூட்டி முதல் ப்ளோரிலிருந்து இங்க தண்ணிக்கு ஏற்பாடு செய்யுங்க..சீக்கிரம்..சீக்கிரம்.. " தடுமாறி அவர்."ஏம்மா உனக்கு வயத்து வலி எப்படி இருக்கு." தணிக் பாசத்துடன்."சரி ஆகிவிட்டது.. வாங்க போகலாம்.." மோகினி.-- முனீஸ்[நான் அவனில்லை]

ஆசை

வேலையில் இருந்து
வீடு வந்த சிரேயா வாசலில் ஜேகேயின்
காலணி இருப்பதை பார்த்ததும் சந்தோஷத்தின் எல்லைக்கே
போய் விட்டாள்.

ஜேகே அவளின் மாமன் மகன். ஜேகே என்றால் அவளுக்கு உயிர்.
ஜேகே என்றால் நன்றாக பிடிக்கும். ஆனால் அவனுடன் கதைப்பதற்க்குதான்
அவளுக்கு சந்தப்பம் இருந்ததில்லை.

இன்று எப்படியாவது கேட்டு விடுவது என்று தீர்மானித்துக் கொண்டாள். வீடெங்கும்
அவனை தேடினாள் காணவில்லை. அவன் பின்புற தோட்டத்தில் நிக்கிறான் போலும்.இவள்
கண்ணாடியில் முகம் பார்த்தாள். இப்படியே போவது சரியில்லை என பட்டது. குளித்து
உடை மாற்றி விட்டு இவள் வரவும் ஜேகே வரவும் சரியாக இருந்தது. ஜேகே இவளைக்
கண்டதும் வெட்கப்பட்டான். இவள் அருகில் சென்றதும் விலக முயன்றவனை எட்டி
கையில் பிடித்து அவன் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டாள்



ம்ம்ம்...... நீங்க நேசரியில சொல்லிக் கொடுக்கிற
பாட்டு நல்லா பாடுவிங்கலாமே.எனக்கு
ஒரு முறை பாடிக் காட்டுங்களேன் என
கொஞ்சிக் கொண்டிருந்தாள் அந்த மூன்று
வயது ஜேகேயிடம்