Friday, May 16, 2008

அழைத்து வா

அழைத்து வா


குப்பை கிளறி
துர்நாற்றம் பொறுத்து
அருவருப்பு தாங்கி
வெளி இழு அவனை

மக்கிக்கொண்டிருந்த பொழுது
உயிர் வாழ்ந்தவன்
வெளிகாற்றில் மூச்சு திணறக் கூடும்
பதறிவிடாதே.....

அழைத்து வா உன் பழைய காதலனை
காதல் விதைத்து
உயிர் அறுத்து போனவனை

விட்டு போவாnன்று
உணரவே இல்லையா நீ....?
கடற்கரை இருட்டின் சத்தியங்கள்
வெறும் சதை உரசலிலும்
மூச்சின் வெப்பதிலும் வந்தவையா.....?

அழைத்து வா உன் பழைய காதலனை
அரை மணி நேர அழுகையில்
அநியாயங்களை நியாயங்களாய்
அமைத்துப் பிரிந்தவனை...

கோபமே வரவில்லையா உனக்கு?
எத்தனை இரவுகள் விழித்திருப்பாய்??
எத்தனை கனவுகள் உதிர துடித்திருப்பாய்?
எத்தனை தலையணைகள் கண்ணீரில் நனைத்திருப்பாய்??
கனவில் பிறந்து கற்பனையில் தத்தெடுத்த
நான்கைந்து குழந்தைகளை எங்கு புதைத்தாய்??

அழைத்து வா உன் பழைய காதலனை
தொங்க தொங்கத் தாலி கட்டி
காதலின் சுவடறுத்து நின்றவனை

சொல்லித் தான் ஆக வெண்டும்

அழைத்து வா உன் பழைய காதலனை



தோல்வியுற்ற காதலிக்கெல்லாம்

நல்ல கணவன் வாய்க்கிறான்...


விட்டுச்சென்றவன் எல்லாம்
நல்ல கணவன் ஆகிறான்..

அழைத்து வா உன் பழைய காதலனை

அவன் மனைவி
யாரையும் தேடி போகும் முன்...
என்னை தேடி
எந்த மனைவியும் வரும் முன்

No comments: