Wednesday, August 20, 2008

காதல் தேசம்

ஒரு நாள் பார்வையிலே
என் நெஞ்சின் ஓரத்தில்
இடம் பிடித்தவளே
பார்த்தேன் உன்னை சிலநாள்
பழகினேன் உன்னுடன் பலநாள்

தீயாய் மூண்டது நம்காதல்
திரிந்தோம் யாழ்ப்பாண வீதியெல்லாம்
திட்டித் தீர்த்தன உன் உறவுகள்
திட்டமின்றி வெளியானோம் வீட்டைவிட்டு

காலை விடிந்தது
அதுவே நம் கல்யாணமானது
என்னை ஏற்கவில்லை உன் உறவுகள்
ஏனெனில் நான் ஏழை என்பதனால்

நம்பி என் கரம்பிடித்த தேவதையே
பணம் தேடி அலையும் மானிடரில்
என் குணம் தேடி வந்த தெய்வமே
உயிர் உள்ளவரை போராடுவேன்

நான் வாழ்வதற்காக அல்ல
உன்னை வாழவைப்பதற்காக மட்டுமே...

No comments: